Homepage Kaizzen PR newsroom

ஸ்டார்ட்அப் சிங்கம் சீசன் 2’ ரியால்டி ஷோ டீசர் வெளியீடு

Announcement posted by Kaizzen PR 06 Jan 2026

ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும். "இது கனவுக்கான கர்ஜனை"

சென்னை:    

தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஸ்டார்ட்அப் ரியாலிட்டி தளமான 'ஸ்டார்ட்அப் சிங்கம்',  இன்று தனது இரண்டாவது சீசனுக்கான டீசரை வெளியிட்டது. இது லட்சியம், வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளுக்கான ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும். "இது கனவுக்கான கர்ஜனை" என்ற தலைப்பில் ஜனவரி 25 முதல் விஜய் டிவி - ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. பெரிய அளவில் சிந்திக்கவும், துணிச்சலாக உருவாக்கவும், நம்பிக்கையுடன் தொழிலை வளர்க்கவும் நினைக்கும் ஸ்டார்ட்அப்  நிறுவன நிறுவனர்களின் உணர்வை இது வெளிப்படுத்த இருக்கிறது.

சீசன் 1 - ஒரு வெற்றிக் கதை 
'ஸ்டார்ட்அப் சிங்கம்' நிகழ்ச்சியின் முதல் சீசன் ஸ்டார்ட்அப் சூழலியல் அமைப்பில் மிகுந்த வரவேற்பை பெற்றது. முதல் சீசனில் 39 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்கேற் ன; இவர்களுக்கு 12 முதலீட்டாளர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட தனிநபர் முதலீட்டாளர்கள் ஆதரவளித்தனர். இதன் மூலம் நிகழ்ச்சிக்கு உள்ளேயும் வெளியேயும் 24 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி முதலீடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி பங்கேற்ற நிறுவனங்களுக்கு மிகுந்த பலனை அளித்ததோடு குறிப்பாக நேரடியாக நுகர்வோருக்கு விற்கும் துறையைச் சேர்ந்த பல பிராண்டுகள், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தங்கள் வருவாயில் 7 மடங்கு வரை வளர்ச்சியை கண்டுள்ளன. இது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதையும் தாண்டி, ஸ்டார்ட்அப்களுக்கான ஒரு நம்பகமான வளர்ச்சி மற்றும் நிதி திரட்டும் தளமாக மாறி உள்ளது. 

சீசன் 2 - இன்னும் பெரிய கனவுகள் 
முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது 'ஸ்டார்ட்அப் சிங்கம் - சீசன் 2' விரைவில் துவங்க உள்ளது. வரவிருக்கும் சீசனில் 26 எபிசோடுகளில் 75-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. தமிழ்நாட்டின் சிறந்த ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ள 30-க்கும் மேற்பட்ட நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தனிநபர் முதலீட்டாளர்களை இது ஒன்றிணைக்க உள்ளது. சிறந்த முதலீட்டாளர் குழுவுடன், சீசன் 2-க்கான நிதித் தொகுப்பு ரூ.100 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப நிலை முதல் நன்கு வளர்ந்த நிறுவனங்கள் வரை அனைத்து வகையான ஸ்டார்ட்அப்களுக்கும் இந்த நிகழ்ச்சி பலன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  'ஸ்டார்ட்அப் சிங்கம் - சீசன் 2' ஜனவரி 25 அன்று விஜய் டிவி மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் அதன் முதல் எபிசோடுடன் துவங்குகிறது.  

இது குறித்து முதல் பார்ட்னர்ஸ்  நிறுவனரும், ஸ்டார்ட்அப் சிங்கத்தின் முதன்மை வழிகாட்டியுமான குமார் வேம்பு கூறுகையில், இத்தளம் தொடர்ந்து நிறுவனர்களின் வெற்றிக் கதைகளை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது ஒளிபரப்பாக இருக்கும் சீசன் 2 பெரிய லட்சியத்துடன் "இது கனவுக்கான கர்ஜனை" என்ற உணர்வை பிரதிபலிக்க உள்ளது என்று தெரிவித்தார். இணை நிறுவனர் ஹேமச்சந்திரன் கூறுகையில்,  சீசன் 1 எதிர்பார்ப்புகளை கடந்து தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் சூழலின் வலிமையை 
உறுதிப்படுத்தி உள்ளது. அதேபோல, ஸ்டார்ட்அப் சிங்கம் நிறுவனர்களுக்கு ஒரு மிக முக்கிய தளமாக வளர்ந்துள்ளது என்று தெரிவித்தார். இதேபோல் சீசன் 2 நிகழ்ச்சியானது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் கூடுதல் வளர்ச்சிக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்று மற்றொரு இணை நிறுவனர் பாலச்சந்தர் தெரிவித்தார். 

Startup Singam சீசன் 2, தொழில் முனைவோர்களின் கனவுகளை நம்பும் சில முன்னோக்குப் பார்வையுள்ள பிராண்ட்களின் ஆதரவுடன் முன்னேறுகிறது. Zoho Title Sponsor ஆக இந்த சீசனை வழங்குகிறது. TTK Prestige CoPresented By, மற்றும் DAC Trusted Home Partner ஆக நிகழ்ச்சியை இயக்குகிறது. Lalithaa Jewellery, VDart Ventures, XB Group மற்றும் City Union Bank ஆகியவை Associate Sponsors. இது Baanhem Ventures முன்வைக்கும் ஒரு முயற்சி—அடுத்த தலைமுறை ஸ்டார்ட்அப் கனவுகளுக்கான மேடை. இந்த சீசன் வெறும் ஸ்டார்ட்அப்களைப் பற்றியது மட்டுமல்ல; இது கனவுக்கான 
கர்ஜனை 

Link of the official teaser of Startup Singam S2 - https://youtu.be/14KPG73v_Pc?si=eKW-
wBMrvwzhkP_s